districts

img

கரும்பு பாக்கி ரூ30 கோடி கேட்டு திருத்தணியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், மே 17- கரும்பு பாக்கி ரூ.30 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (மே 16) திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த இணை மின் உற்பத்தி மற்றும்  எத்த னால் உற்பத்தி செய்யும் வகையில் நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,  சட்ட விரோத மாக பிடித்தம் செய்த கட்டுக் கழிவு என்ற பெயரில் 3 விழுக்காட்டை விவசாயின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்த போராட்டம்  நடைபெற்றது. இதனை தொடர்ந்து அடுத்த 10 நாட்களில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு பாக்கியில் முதல் தவணையாக  ரூ 5 கோடி வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் மேலாண்மை இயக்குநர் உறுதி யளித்துள்ளார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதில் கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என். ஸ்ரீநாத் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசி நாராயணன், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சி.பெரு மாள், மாநிலக் குழு உறுப்பி னர் ஜெயச்சந்திரன், மாவட்டத் தலைவர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;