districts

img

விஷ்ணுவாக்கத்திற்கு நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க அதிகாரிகள் ஒப்புதல்

திருவள்ளூர், நவ 30- திருவள்ளூர் அருகில் உள்ள விஷ்ணுவாக்கம் கிராமத்திற்கு மாநகர பேருந்துகள் தடம் எண் 505கே, 572 கே ஆகிய இரண்டு பேருந்துகள் இயங்கி வந்தன.  திடீரென்று பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள், பெண்கள்,  கடுமையாக பாதித்தனர்.  இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதனன்று (நவ 30)  பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்  டம் நடைபெறும் என அறிவித்தனர். இத்தகவல் அறிந்து திருவள்ளூர் கோட்டாட்சியர் மகாபாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.  காந்திமதிநாதன், வட்டார போக்கு வரத்து அதிகாரி பேரத்தூர் கிராமத்திற்கு புதனன்று நேரடியாக சென்று வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.கலையரசன், பகுதி தலைவர் ராஜேஷ், பகுதி குழு நிர்வாகிகள் சுதாகர், சந்துரு, சிபிஎம் வட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, வட்ட குழு உறுப்பினர் கே.முருகன் ஆகியோருடன் பேச்சு நடத்தினர். பேரத்தூர், விஷ்ணு வாக்கம் கிராமத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் அடுத்த 10 நாட்களுக்குள் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

;