districts

img

விவசாயத்தை சீரழிக்கும் எஸ்.என்.ஜி தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுத்திடுக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருவள்ளூர், ஆக 23- திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தில் ஆந்திர மாநில எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எஸ்.என்.ஜி  டிஸ்டில்லரீஸ் என்ற  தனியார் மதுபான ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் சுத்திகரிப்பு செய்யாமல் தமிழக எல்லையில் உள்ள வெளிகரம் ஏரியில் விடப்படுகிறது. இதனால்  ஏரியில் உள்ள  தண்ணீர் முழுவதும் கருப்பு நிறமாக மாறி விஷத்தன்மை கொண்டதாகவும் உள்ளது. இந்த ஏரியில் உள்ள தண்ணீரை நம்பிதான் வெளிகரம், வெங்கட்ராஜீ குப்பம் ஆகிய ஊராட்சிகளின் விவசாயிகள் விவசாயம் செயது வருகிறார்கள்.    விஷம் கலந்த தண்ணீர் பட்டு சில விவசாயிகளின்  கால்களில் கருப்பு நிறத்தில் பருக்களும் ஏற்பட்டுள்ளது. அடுத்து கால்நடைகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது.விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஆலை கழிகளை  அனுமதித்த  மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்  சங்கம் கூறியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தனியார் ஆலை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா ளர் பி.துளசிநாராயணன் கேட்டுக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், விஷத்தன்மை கொண்ட  ஏரியையும் விவசாயிகள் சங்க தலைவர்கள் திங்களன்று (ஆக22)  பார்வையிட்டனர். இதில் விவசாயிகள் சங்கத்தின்  மாவட்ட நிர்வாகி ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;