districts

img

விவசாயிகளை வெளியேற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு விவசாயிகள் கண்டனம்

திருவள்ளூர், செப் 14- மீஞ்சூர் அருகில் உள்ள செங்கழநீர்மேடு பகுதி யில் அரசு நிலத்தில், விவ சாயம் செய்து வந்த சிறு விவசாயிகளை  வெளி யேறும் நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. மீஞ்சூர் அருகில் உள்ள வயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்கழநீர்மேடு, ராஜாந்தோப்பு , ராமநாத புரம் ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான சுமார் 110 ஏக்கர் மேய்க்கால் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் 30 சென்ட், 50 சென்ட் என கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நெல், பூந்தோட்டம், எள், தர்பூசணி போன்ற பயிர்களை சாகுபடி செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது திடீரென கிரா மத்தில் உள்ள யாருக்கும் தெரியாமல், அந்த நிலங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதால், ஊராட்சி நிர்வாகம் சிறு விவ சாயிகளை எந்த முன்ன றிவிப்பு ஏதுமின்றி வெளி யேற்றியது. ஊரில் உள்ள தொழிற்சாலைகளிலும் வேலை கிடைக்கவில்லை. விளை நிலங்களையும் பிடிங்கியதால் எந்த வாழ்வாதாரம் இன்றி  அப்பகுதிகள் நடுத்தெரு வில் நிம்மதியின்றி தவிக் கின்றனர். 

அந்த பகுதியை பசுமையாக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் சாதாரண சிறு விவ சாயிகளிடமிருந்து அரசு நிறு வனங்களை எடுத்து மரங்களை வளர்த்து கார்ப்பரேட் முதலாளியான அதானிக்கு கொடுக்க மாவட்ட நிர்வாகம் திட்ட மிட்டு வருகிறது.மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நடவு செய்ய ஜேசிபி இயந்தி ரத்தை பயன்படுத்துகிறது. இதற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளை நிலத்தில் இருந்து வெளியேற்ற கூடாது. அம்மக்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும் என்று விவ சாயிகள் சங்கம்  வலியுறுத்தி யுள்ளது. பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகளை தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தில் மாநில செயலாளர் பி.துளசி நாராய ணன்,  மாவட்டச் செயலா ளர் ஜி.சம்பத்,  மாவட்ட துணைத் தலை வர் பி.கதிர்வேல் ஒன்றி யத் தலைவர் எஸ்.தியாக ராஜன், பொருளாளர் டி.சுந்தரம்,  மாதர் சங்க ஒன்றியத் தலைவர் எம்.புவனேஸ்வரி ஆகியோர்  சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

;