districts

img

விவசாயிகளை வெளியேற்றாதே: விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், செப் 15- வாயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்கழுநீர்மேடு பகுதியில் அரசு நிலத்தில் விவசாயம் செய்து வந்த சிறு விவசாயிகளை வெளி யேறும் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் வியாழனன்று (செப் 15) மீஞ்சூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீஞ்சூரை அடுத்த வாயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்கழுநீர்மேடு, ராஜாந்தோப்பு, ராமநாத புரம் ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான மேய்க்கால் நிலத்தில் சிறு விவசாயிகள் பயிர்கள் செய்து வந்தனர்.இந்த நிலையில் முன்னறிவிப்பு இன்றி அந்த நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.  ஊராட்சி நிர்வாகத்தின் இந்த முடி வால் விவசாயிகள் மத்தி யில் கடும்  எதிர்ப்பு எழுந்துள்ளது.  இதை யொட்டி  தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் தலைமை யில் மீஞ்சூர் பிடிஒ அலுவல கம் முன்பு இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விவ சாயத்தை அழித்து, மரக்கன்றுகள் நடவு செய்ய மாட்டேன் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன், ஒன்றிய பெரும் தலைவர் ரவி ஆகி யோர் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியை ஆய்வு செய்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என வும் தெரிவித்தனர். இதற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலை வர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். மாநில செய லாளர் பி.துளசி நாராயணன், மாவட்ட செய லாளர் ஜி.சம்பத், கே.விஜ யன், ஜி.வினாயக மூர்த்தி, (சிஐடியு), தியாக ராஜன், சுந்தரம்(விச),  இ.ஜெயவேல்(சிபிஎம்), என்.ரமேஷ்குமார் (கட்டு மானம்), எம்.புவனேஷ்வரி (மாதர்சங்கம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;