districts

ஆரணி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி தீவிரம்

பொன்னேரி, அக்.2- திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக ஆரணி ஆறு விளங்குகிறது. இந்த ஆற்றில் போதிய தடுப்பணைகள் இல்லாத தால் ஆண்டுதோறும் 7 டி.எம்.சி முதல் 15 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.  இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால் 17 ஆயிரம் கன அடி நீர் ஆரணி ஆற்றில் வெளியேறியது. இதனால் சோமஞ்சேரி ஏ.ரெட்டிபாளையம், மனோபுரம், பிரளம்பாக்கம் வஞ்சிவாக்கம் ஆண்டார் மடம், பெரும்பேடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.  இதைத்தொடர்ந்து ஆரணி ஆற்றின் கரை களை பலப்படுத்த உத்தர விடப்பட்டு பணிகள் தீவிர மாக நடந்து வருகிறது. வருகிற பருவமழைக்கு முன்பு கரைகளைப் பலப் படுத்தி முடிக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆரணி ஆற்றில் கரைகளை பலப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏ.ரெட்டி பாளையம் பகுதியில் கரைகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

;