districts

img

காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன் எம்எல்ஏ உறுதி

திருவள்ளூர்,அக்.17- கும்மிடிப்பூண்டி வட்டார  ஆரம்ப சுகாதார நிலையங்களில்  காலியாக உள்ள 28 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் உறுதியளித்துள்ளார். கும்மிடிப்பூண்டியில் வட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 32 துணை  சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில்  6 மருத்துவர்கள் உள்ளிட்ட  28 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த சூழலில் கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார பேரவைக் கூட்டம் பிடிஒ அலுவல கத்தில் சட்டமன்ற உறுப்பினர் டி.ெஜ.கோவிந் தராஜன் தலைமையில்  நடைபெற்றது. வட்டார தலைமை  மருத்துவர் கோவிந்த ராஜன், ஒன்றியக் குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  வாசுதேவன், ரவிக்குமார் ஆகியோர் கலந்து  கொண்டனர். இந்த கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி வட்டாரத்திற்குட்பட்ட 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 32 துணை சுகாதார நிலையங் களுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஊராட்சி  மன்ற தலைவர்கள் கீழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், ஆரம்பாக்கம்  தனசேகர், ஒன்றியக் கவுன்சிலர்கள் ஜெயச் சந்திரன், சிட்டிபாபு, மெய்யழகன், உஷாரவி  உள்ளிட்டோர் பங்கேற்று அவரவர் பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களின் தேவைகளை எடுத்து கூறினர். கும்மிடிப்பூண்டியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுற்று சுவர் அமைத்தல்,  அனைத்து ஆரம்ப  சுகாதார நிலையங்கள், துணை சுகாதார  நிலையங்களில் காலியாக உள்ள 6 மருத்து வர்கள் உள்ளிட்ட  28 பணியிடங்களை நிரப்ப  கோரிக்கை வைக்கப்பட்டது. அவ்வாறே ஈகுவார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் மருத்துவ சிகிச்சை மையம், சித்த மருத்துவத்திற்கு தனி கட்டிடம் போன்றவை வலியுறுத்தப்பட்டது. இதில் வலியுறுத்தப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் மாவட்ட ஆட்சியருக்கும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் தெரிவித்தார்.

;