districts

img

உயர்மின் கோபுர பாதிப்புக்கு இழப்பீடு விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தல்

திருவண்ணாமலை, ஜூலை 31- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட 8ஆவது மாநாடு கீழ்பென்னாத்தூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எஸ். பலராமன் தலைமை தாங்கினார், மாவட்ட துணை தலைவர் ஜி. பன்னீர்செல்வம் கொடி யேற்றி வைத்தார், ஒன்றிய செயலாளர் பி. லட்சுமணன் வரவேற்றார், மாவட்ட துணைச் செயலாளர் ஆர். காமராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார், மாநாட்டை துவக்கி வைத்து மாநில துணை தலைவர் டி. ரவீந்திரன் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் டி .கே. வெங்க டேசன் செயலாளர் அறிக்கையும், பொருளாளர் அ. உதயகுமார் வரவு, செலவு அறிக்கையும் சமர்பித்தனர். எஸ். அபிராமன் (வழக்கறிஞர்சங்கம்), பாரி(சிஐடியு),எம்.பிரகலநாதன் (விதொச),கே.வாசுகி (சிபிஎம்), எஸ்.லூர்து மேரி (மாதர்சங்கம்), சி. எம். பிரகாஷ் (வாலிபர்சங்கம்), ஆர். சிவாஜி(மாற்றுத்திறனாளிகள் சங்கம்), எம். மாரிமுத்து(மலைசங்கம்), பி. லட்சுமணன் (வேட்டைக்காரன்சங்கம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில், உயர்மின் கோபு ரத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், சென்னை-சேலம் எட்டு வழி சாலையை தடுத்து, விவசாய நிலங்களை பாது காக்க வேண்டும், வேளாண் இடுபொரு ட்களை தட்டுப்பாடு இன்றி, ஊழ லின்றி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், செயல்படாமல் இருக்கும் செங்கம் விதை பண்ணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும், போளூர் தரணி சக்கர ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய 106 கோடியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், குப்ப நத்தம், சாத்தனூர் அணை, செண்பகத் தோப்பு, மிருகண்டா அணைகளை தூர்வாரி, கால்வாய்களை சரி செய்து, பாசனத்திற்கு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்ட தலைவராக டி.கே.வெங்க டேசன், செயலாளராக எஸ்.பலராமன், பொருளாளராக அ.உதயகுமார் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணை செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி நிறைவுரையாற்றினார். கே .ரஜினி ஏழுமலை நன்றி கூறினார், முன்னதாக, வேளாண்மை துறை அலு வலகம் அருகில் இருந்து துவங்கிய விவசாயிகள் பேரணியை, சிபிஎம் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார் துவக்கி வைத்தார்.

;