districts

உடுமலையில் மலைவாழ் மக்கள் யானையை தாக்கியதாக சமூக வலைதளங்களில் பரப்பபடுவதுதன் பின்னணி

உடுமலை, மே 6- உடுமலையில் மலைவாழ் மக் கள் யானையை தாக்கியதாக சமூக வலைதளங்களில் பரப்பபடும் செய் தியின் பின்னணி குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் விளக்கம் அளித் துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வம் மற்றும் தலைவர் என்.மணி ஆகி யோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க. விஜயகார்த்திகேயனுக்கு அனுப்பி யிருக்கும் கடிதத்தில் கூறியிருப்ப தாவது, திருப்பூர் மாவட்டம், உடு மலைப்பேட்டை தாலுகா திரு மூர்த்திமலை குடியிருப்பு பகுதியில் 150 குடும்பங்கள் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஆடு,  மாடு,  கோழி வளர்ப்பில் ஈடுபடுவது டன் விவசாயம் செய்து பிழைத்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத் துக்கு முன்பு திருமூர்த்தி அணை  அடிவார பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்திருக்கின் றனர்.

அப்போது அவ்வழியாக யானைகள் கூட்டம் வந்திருக்கி றது. அப்போது சில யானைகள் மாடு களை விரட்டியிருக்கிறது. அப் போது அங்கிருந்த அனைத்து மாடு களும் சிதறி ஓடியிருக்கின்றன. மாடு மேய்த்த இளைஞர்களையும் தாக்க வந்திருக்கிறது. இதையடுத்து  தங்க ளைப் பாதுகாத்துக் கொள்வதற் காக அந்த யானைகளை இளைஞர் கள் வேறு பகுதியை நோக்கி  விரட்டி யிருக்கின்றனர். அப்படி விரட்டிய  இளைஞர்கள் யானைகளை விரட்டுவதற்கு வனத் துறையின் மூலம் பயிற்சி பெற்ற வர்கள் ஆவர். ஆகவேதான் சாதா ரண கற்கள், சிறு தடிகள் மூலம் யானைகளை விரட்டி உள்ளனர்.  அதை அவர்களே வீடியோவும் எடுத் துள்ளனர். அதிலே இந்த வீடியோக் களை வனத்துறையில் இருக்கிற வேட்டை தடுப்பு காவலர்கள் வாங்கி பதிவு செய்துகொண்டு ஏதோ யானைகளை பெரியளவில் சித்திர வதை செய்தது போல் ஊடகங்க ளில் பரப்பி வருகின்றனர்.

நியாயப் படி வனத்துறையில் மலைவாழ் மக்கள்தான் வேட்டை தடுப்பு காவ லர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் கீழ் பகுதியில் உள்ள இந்த மலைவாழ் மக்களை அடக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணதில் சிலர் இதனை செய்தி ருக்கின்றனர். மேலும் இப்படி சமூக வலைத்தளங்களில் தவறாக சித்த ரித்து வருவதன் பின்னணியில் இந்த மக்கள் மீது தவறான எண்ணத்தை உருவாக்கும் சாதிய ஆதிக்க மனோ பாவம் கொண்ட சிலர் இதனை திட் டமிட்டு செய்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் வனத்தின் மீதும் அதில் உள்ள உயிரினங்கள் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள் ளவர்கள். ஆனால், அம்மக்களை மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலர் மேற் கண்ட வீடியோவை பதிவிட்டு யானைகளை பெருமளவில் சித்தர வதை செய்துள்ளதாக சித்தரிப்பது தவறானதாகும்.

இந்த வீடியோவை உற்றுப் பார்ப்பவர்களுக்குத் தெரி யும் எந்த பெரிய கூர்மையான ஆயுதங்களையே பயன்படுத்தா மல் சிறுசிறு கற்கள் மூலம் அவர் கள் யானைகளை தங்களை பாது காப்பதற்காக விரட்டுகிறார்கள். எனவே தாங்கள் தலையிட்டு தங்கள் வாழ்வாதாரமான மாடுகள் மேய்க் கிற போது ஏற்பட்ட இன்னலை போக்குவதற்கு தான் மேற்கண்ட சம்பவம் நடந்துள்ளது. இதை தவிர வேறு எண்ணம் இல்லை என்பதை தெரிவிப்பதுடன் மேற்கண்ட வீடி யோவை தவறான உள்நோக்கத் தோடு  தகவல்களை பதிவு செய்து பரப்பி வருகிறார்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அம் மக்கள் சார்பிலும், தமிழ்நாடு  மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக் கிறது.

;