districts

ஐடிபிஎல் திட்ட விசாரணைக்கு விவசாயிகள் எதிர்ப்பு காத்திருப்புப் போராட்டத்தையடுத்து உத்தரவு ரத்து

திருப்பூர், ஜன. 13 - காங்கயம் வட்டாரத்தில் ஐடிபி எல் திட்ட விசாரணைக்கு அறி விப்பு செய்யப்பட்டதற்கு எதிராக ஆட்சியர் அலுவலகத்தில் விவ சாயிகள் காத்திருப்புப் போராட் டத்தை  நடத்தினர். இதையடுத்து 19ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விசாரணை ரத்து செய்யப்பட்டது. ஐடிபிஎல் திட்டத்தில் விவ சாய விளைநிலங்கள் வழியாக பெட்ரோலிய  குழாய்கள் அமைப் பதற்கு நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரு கின்றனர். விவசாய விளைநில ங்கள் வழியாக கொண்டு செல் வதற்கு மாறாக தேசிய நெடுஞ் சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஐடிபிஎல் நிறுவனம் காங்கயம் வட்டாரம் சிவன்மலை, கீரனூர், படியூர், மற வபாளையம் உள்ளிட்ட ஊராட் சிகளில் ஐடிபிஎல் திட்டத்துக்கு நிலம் எடுப்பு தொடர்பாக ஜனவரி 19 ஆம் தேதி முதல் விசாரணை நடத்த மேற்படி கிராமங்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடம் கடும் அதி ருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் நடைபெற்ற முத்த ரப்பு பேச்சுவார்த்தையில் விவசா யிகளின் கோரிக்கையை அரசின்  கவனத்திற்கு  கொண்டு செல்வ தாகவும், அதில் முடிவு தெரிந்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற் கொள்ளும் வரை விவசாயிகள் நிலத்தில் ஐடிபிஎல் திட்டப்ப ணிகள் எதையும் செய்வதில்லை என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.  இந்த நிலையில் மீண்டும் விசாரணை நடத்துவது என்ற பெய ரில் பணியைத் தொடங்க முயற் சிப்பதற்கு விவசாயிகள் கடும் ஆட்சேபணை தெரிவித்து புத னன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகம் நுழைவாயில் முன்பாக காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர்.  முன்னதாக, விசார ணையை ரத்து செய்ய வேண்டும்  என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளிக்க முயன் றனர்.  

ஆனால், விவசாயிகள் ஒரு சிலர் மட்டுமே சென்று மனு அளிக் குமாறு காவல்துறையினர் கெடுபிடி செய்தனர். இதனால், விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலரிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக விவசாய சங்கப் பிரதிநிதிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் ஜனவரி 19ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட விசாரணை  ரத்து செய்வதாக மாவட்ட வரு வாய் அலுவலர் தெரிவித்தார். இதையடுத்து  விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண் டனர்.   இந்த இயக்கத்தில் பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளருமான ஆர்.குமார், ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் இயக்கத்தின் அழகுமலை பாலசுப்பிரமணியம், ஜெயப்பிரகாஷ், முத்துராமலிங் கம், வழக்கறிஞர் ஏசையன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்க றிஞர் மு.ஈசன், தலைவர் சண்முக சுந்தரம், திமுக விவசாய அணி திருப்பூர் வடக்கு மாவட்ட இணை  அமைப்பாளர் கெம்கோ பி.ரத்தி னசாமி, திமுக இளைஞரணி பொங்கலூர் ஒன்றிய அமைப் பாளர் ரமேஷ், கொமதேக விவ சாய ஒருங்கிணைந்த விவசாய அணி மாவட்ட செயலாளர் கே.தே வராஜ், உழவர் உழைப்பாளர் கட்சி மாநகர செயலாளர் ஜீவா கிட்டு, பிரச்சார அணி செயலாளர் ஏபிடி மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;