districts

சேவூரில் ரூ.13 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, செப்.14- அவிநாசி அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.13 லட்சத் திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 650 மூட்டைகள் விற்பனைக்காக வந் தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,750 முதல் ரூ.6,890 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,280 முதல் ரூ.6,610 வரையிலும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ.5,450 முதல் ரூ.5,630 வரையிலும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.13 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 14 வியாபாரிகள், 95 விவசாயிகள் பங்கேற்றனர்.

;