districts

img

மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த ஊத்துக்குளி அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

திருப்பூர், நவ.24 - திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி கரைப் பாளையம் வி.பி.சிந்தன் காலனியைச் சேர்ந்த குமரவேல், சுதா தம்பதியரின் இரண்டாவது மகள் கு.கவிதா. இவர் ஊத் துக்குளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி யில் படித்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக்கிறார்.

அரசு பள்ளி மாணவர்க ளுக்கான 7.5  சதவிகித இடஒதுக்கீடு மற்றும் அருந்ததியருக்கான 3 சதவிகித உள்ஒதுக் கீடு மூலம் கோவை பிஎஸ்ஜி தனியார் மருத் துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றுள்ளார். இதையடுத்து திங்களன்று காலை 8 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அவரது வீட் டுக்குச் சென்று கவிதாவுக்கு வாழ்த்துத் தெரி வித்து பொன்னாடை அணிவித்து பாராட்டி னர்.

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற் குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவருமான ஆர்.குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்த சாமி, திமுக ஊராட்சி செயலாளர் வெற்றீஸ் வெங்கடாசலம், ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சு. ஆனந்தன், ததீஒமு தாலுகா செயலாளர் கே.எஸ்.ராமசாமி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோட்ட தலைவர் கே.ஏ.சக்தி வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மருத்துவ மாணவி கு.காவ்யாவின் தாயார் சுதா ஊத்துக்குளி அரசு மருத்துவ மனையில் கடைநிலை ஒப்பந்த ஊழியராக வும், தந்தை சுமைப்பணி தொழிலாளியா கவும் வேலை செய்து வருகின்றனர். இவர்க ளுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ள னர். மூத்த மகள் பி.இ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். நான்கு பேரையும் நன்கு படிக்க வைக்க உறுதியோடு செயல்பட்டு வரும் பெற்றோருக்கு மார்க்சிஸ்ட் கட்சி யினர் பாராட்டுத் தெரிவித்தனர்.

;