districts

img

ஓய்வுபெற்று 19 மாதங்கள் கடந்தும் ஓய்வூதிய பலன் தரவில்லை திருப்பூரில் போராடிய சிஐடியு தூய்மைப் பணியாளர்கள் கைது

திருப்பூர், ஜன. 27– உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியங்க ளில் பணியாற்றி ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு 19 மாதங்கள் கடந்தும் சட்டப்படி வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களை தராமல் இழுத்தடிப்பதைக் கண்டித்து சிஐடியு தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆனால், பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு அக்கறை காட்டாமல், காவல் துறையினர் அவர்களை அராஜகமாகக் கைது செய்த னர். திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றி யம், புங்கமுத்தூர் ஊராட்சியில் க.பெரிய காளிமுத்து, மடத்துக்குளம் ஒன்றியம் கடத் தூர் ஊராட்சியில் ப.கண்ணையன் ஆகிய இருவரும் தூய்மைப் பணியாளர்களாக பல ஆண்டு காலம் பணியாற்றி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்ற னர்.

அவர்களுக்கு அரசாணை எண் 348 இன்படி வழங்க வேண்டிய ரொக்கத் தொகை ரூ.50 ஆயிரம், மாத ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் 19 மாதங்களாகியும் இதுவரை வழங்கப்படவில்லை. அவர்கள் குடும்பம் கடும் வறுமையில் வாடி வருகிறது. இதைய டுத்து, சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பல கட்ட முயற்சிகள், போராட்டங்கள் நடத்தி யும் அதிகாரிகள் நியாயமான கோரிக்கை என வாயளவில் ஒப்புக் கொண்டாலும், இது வரை அந்த ஓய்வூதிய பலன்களைத் தர வில்லை. இதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாக மும் உரிய உத்தரவு பிறப்பித்து பணத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவில்லை.  இதையடுத்து புதனன்று திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை ஊழி யர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ் தலைமையில் பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அங்கு வந்த காவல் துறை யினர் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கெடுபிடி செய்தனர். மேலும், அதி காரிகள் இங்கு வந்து பேச்சு நடத்தி உரிய தீர்வு காணாமல் இங்கிருந்து கலைய மாட் டோம் என சிஐடியு சங்கத்தினர் உறுதியு டன் தெரிவித்தனர். அதிகாரிகளை வரவ ழைத்து பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளாத காவல் துறையினர், போக் குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலை யின் ஒதுக்குப்புறமாக உண்ணாவிரதம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களை கைது செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து சிஐடியு சங்கச் செயலா ளர் கே.ரங்கராஜ், தலைவர் பி.பழனிசாமி உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்த னர்.

மேலும், கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்ட நிலை யிலும், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், ஓய்வூதியம் பெற்றோ ருக்குப் பணப்பயன் கிடைக்கும் வரை தங் கள் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அறிவித்து, காவலர்கள் மதிய உணவு கொண்டு வந்து கொடுத்ததையும் சாப்பிடா மல் தங்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்த னர்.

;