districts

img

75 வருடமாக மின்சாரமே இல்லாத மலை கிராமம்

திருப்பத்தூர், செப்.26 - திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலை பஞ்சாயத்தில் அத்னாகூர், கோட்டூர், பள்ளகனியூர், மெட்டுகனியூர், நிலாகவூர், பாடானூர், புத்தூர் ரானேரி, தாயலூர், மங்களம், மஞ்ச கொள்ளை, புதூர், கொட்டை யூர், புங்கனூர், முத்தானுர் ஆகிய கிராமங்கள் உள்ளன. கோட்டூர், நிலாகவூர், காரப்பறை ஆகிய  கிராம பகுதிகளில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் புதிய கிளை அமைப்பும், பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஆர்.எ.லட்சுமண ராஜா, கோட்டூர் காளி, காரப் பறை யசோதா ஆகியோர் தலைமை தாங்கினர்.சங்கத்தின் துணைத் தலை வர் ஏ.வி.சண்முகம் கொடி ஏற்றி வைத்தார்.  மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பி.டில்லி பாபு பெயர் பலகையை திறந்து வைத்து பேசுகையில், இந்த பகுதி களில் பல தலை முறைகளாக 100 வருடங்க ளுக்கும் மேலாக எந்த அடிப்படை வசதியும் இன்றி பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். சுதந்திரம் பெற்று 75 வருடங்களை கடந்தும் மின்சாரம் இல்லாமல் இருட்டில் வாழும் நிலை உள்ளது என்றார். நில மாபியாக்கள் மூலம் இந்த மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகிறது என்றும் நிலத்தையும், குடி யிருப்புகளையும் அகற்றி சுற்றுலா பயணி களை மகிழ்விக்க ‘பொட்டானிக்கல் கார்டன்’ அமைக்கப்போதாக கூறுவதால் அந்த மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வரும் நிலை உள்ளது என்றும் கூறினார்.  மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறை வேற்றித்தர வேண்டும், அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கும், குடி யிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க நட வடிக்கை எடுக்க அதி காரிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக் கைவிடுத்தார். நிகழ்ச்சியில் ஜவ்வாது மலைசெயலாளர் ஜெயராமன், ஏலகிரி மலை தலைவர் மனோகர், செய லாளர் பெருமாள், இளங்கோ, சிபிஎம் திருப்பத்தூர் தாலுகா கமிட்டி செயலாளர் எம்.காசி, துணைத் தலை வர்கள் லட்சுமி, ரோசி, துணைச் செய லாளர் கமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;