districts

நெல்லையில் அரசு பொருட்காட்சி திறப்பு

திருநெல்வேலி, செப். 21-. நெல்லையில் ஆண்டுதோறும் நெல்லை யப்பர் கோவில் ஆனித்தேரோட்டத்தை ஒட்டி  பொருட்காட்சி நடத்துவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நடத்தப் பட வில்லை. இந்தநிலையில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நெல்லையில் இந்த ஆண்டு பொருட் காட்சி நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் வ.உ.சி. மணிமண்டபம் பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து அங்கு பொருட்காட்சி அமைக்கப்பட்டது. அரசின் வேளாண்துறை, வனத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பிலும் அங்கு 31 அரங்குகள், 19 கடைகள், 11 உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ ராட்டினங்கள், துரித உணவு கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சி தொடக்க விழா செவ்வாயன்று நடந்தது. விழாவுக்கு செய்தி-மக்கள் தொடர்பு துறை செயலாளர் மகேஷ் காசிராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொருட் காட்சியை திறந்து வைத்தார்.

சபாநாயகர் அப்பாவு அரசு துறை அரங்குகளை திறந்து வைத்தார். பின்னர் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வரவேற்று பேசினார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் கலந்து கொண்டு 699 பேருக்கு ரூ.3 கோடியே 99 லட்சத்து 1619 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி னார்கள்.  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், “தமிழக அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பொருட்காட்சியில் அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் இங்கு வந்து பார்த்து அரசு திட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே 3 இடங்களில் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 4 லட்சத்து 70 ஆயிரம் ‌பேர் வந்து பார்த்து சென்றுள்ளனர். இந்த பொருட் காட்சி 45 நாட்கள் நடக்கிறது” என்றார். சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “தமிழக அரசு மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்லூரி மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இதேபோல் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது. ராதாபுரம் தொகுதியில் அரசு உதவி பெறும் 288 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.  விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், டாக்டர் சதன் திருமலை குமார், செய்தி-மக்கள் தொடர்பு துறை இயக்கு னர் ஜெயசீலன், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜெயஅருள்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;