திருநெல்வேலி, நவ.6- நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியன் காரியாண்டி அருகே உள்ள வடிவாள்புரத்தை சேர்ந்தவர் நீல்ஜான்சி (62). வீட்டில் தனது பேத்தியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு பெய்த மழை யில் இவர்களது ஓட்டு வீடு சுவர் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மழையால் சேதமடைந்த வீட்டை ராமகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் வளர்மதி சேர்மதுரை, கிராம நிர்வாக அலுவலர் சேர்மத்துரை ஆகியோர் பார்வை யிட்டனர்.