districts

img

புதிய மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து ஆட்டோ தொழிலாளர் முற்றுகை போராட்டம்

திருநெல்வேலி, ஏப். 18 அநியாயமாக உயர்த்திய எப்சி கட்டணத்தை குறைத்திடக்கோரியும், தாமத எப்சிக்கு தினமும் 50 ரூபாய் அபராதம் விதிப்பதை கைவிடக் கோரி யும்,15 வருட பழைய ஆட்டோவிற்கு எப்சி கட்டணத்தை 600 லிருந்து 6000 ரூபாயாக  அதாவது 10 மடங்கு உயர்த்தியதை வாபஸ் பெறக் கோரி யும், ஆன்லைன் அபராதம் முறையை கைவிடக்கோரியும், மத்திய அரசு கொண்டுவந்ததுள்ள புதிய மோட்டார் வாகனம் சட்டத்தை  தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி வட்டாரப் போக்குவரத்து அலு வலகம் முன்பு முற்றுகை போராட் டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு ஆட்டோ சங் கத்தின் மாவட்டத் தலைவர் டி.காம ராஜ் தலைமை தாங்கினார்.சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்  சங்கம் மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.முருகன், போக்குவரத்து சம் மேளன குழு உறுப்பினர் சங்கிலிபூதத் தார், சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்க மாவட்ட பொதுச் செயலா ளர் மரிய ஜான் ரோஸ், நெல்லை மாநகராட்சி 55 ஆவது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் முத்து சுப்ரமணியன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் நிறைவுரை ஆற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டு நர்கள் சங்கம் சிஐடியூ சார்பில் திரு நெல்வேலி வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் மனு கொடுக்கப் பட்டது.

நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம் முன்பு ஆட்டோ தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத் தாமல் தடுத்திட வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு ஆட்டோ தொழிலா ளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பொன் சோபனராஜ் தலைமை வகித்தார். மேலும் சிஐடியு  மாவட்ட செயலாளர் கே. தங்கமோக னன், மாவட்ட துணை தலைவர் எஸ்.  அந்தோணி, ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் மரிய ஸ்டீபன், கன்னியா ஸ்பின் பொது செயலாளர் வடிவேல் குமார், ஆட்டோ சங்க நிர்வாகி பெஸ்லி பென், மோட்டார் சங்க மாவட்ட பொரு ளாளர் ஆசிர் உள்ளிட்டோர் பேசினர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;