districts

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆய்வு

திருநெல்வேலி, செப்.5- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து தேசிய பேரிடர்  மேலாண்மை ஆணையத்தி னர் ஆய்வு மேற்கொண்டனர்.  கூடங்குளம் அணுமின்  நிலையம் நெல்லை மாவட் டம் கூடங்குளத்தில் தலா ஆயி  ரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 4 அணு உலைகளுக்கு கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில்  கூடங்குளம் அணுமின் நிலை யத்தில் செய்யப்பட்டுள்ள பாது  காப்பு ஏற்பாடுகள், ஒத்திகை கள் குறித்து ஆய்வு செய்வ தற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சனிக்கிழமை கூடங்குளம் அணுமின் நிலை யத்திற்கு வந்தனர்.  தேசிய பேரிடர் மேலா ண்மை ஆணைய செயலா ளர் கமல் கிஷோர், உறுப்பி னர்கள் ராஜேந்திர சிங், எஸ். கே.கோஸ், தேசிய பேரிடர்  மீட்பு குழு டி.ஐ.ஜி. மோஷன் சகடி, துணை கமாண்டன்ட்  பிரவீன் பிரசாத், இந்திய அணுசக்தி கழக நிர்வாக இயக்குனர் கே.கே.டி. ஆகி யோர் கொண்ட குழுவினர் அணுமின் நிலையத்தில்  ஆய்வு மேற்கொண்டனர். அவர்  கள் அணு உலை அமைந்த பகுதி மற்றும் முக்கிய இடங்  களில் செய்யப்பட்டு உள்ள  பாதுகாப்பு, ஒத்திகை ஏற் பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  தொடர்ந்து கூடங்குளத்தில் ஆய்வு கூட்  டம் நடந்தது. இதில் அணு மின் நிலைய வளாக இயக்கு னர் பிரேம்குமார், கூடங்  குளம் அணுமின் நிலையத் தில் அவசர காலங்களில் செய்யப்பட்டு வரும் பாது காப்பு நடவடிக்கைகள் குறித்  தும், ஒத்திகை குறித்தும் குழு வினருக்கு விளக்கம் அளித் தார். இதில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷாப்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;