districts

திருவாரூரில் வாலிபர் சங்கப் பேரவை

திருவாரூர், ஏப்.25-

   இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூரில் மாவட்டப் பேரவை  மாவட்டத் தலைவர் ஏ.கே.வேலவன் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.கார்த்தி துவக்க உரையாற்றினார், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் சிறப்புரையாற்றினார்.

   கல்வி நிபந்தனையின்றி படித்த இளைஞர்களுக்கு தாட்கோ, டிக் மூலம் கடன் வழங்கி வேலை வாய்ப்பு களை உருவாக்க வேண்டும், மாணவர்களுக்கு வேலை  வாய்ப்பை உருவாக்க அனைத்து ஒன்றிய மையங்களி லும் பயிற்சி வகுப்பு நடத்தவேண்டும். அதற்கான ஆசிரி யர்களையும் அரசு உருவாக்க வேண்டும், அனைத்து ஊராட்சி, நகரங்களிலும் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  பேரவையில் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சலா வுதீன், பொருளாளர் எம்.டி.கேசவராஜ்,இளம் பெண் உபக்குழு கன்வீனர் மோனிஷா மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பேரவையில் பங்கேற்றனர்.  இப் பேரவை யில் தலைவராக எம்.எஸ்.ஜெய்கிஷ், செயலாளராக ஏ.கே. வேலவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.