districts

உலக நுரையீரல் புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், ஆக.5-  

     பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  நிறுவனம், நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர்  படை சார்பில், உலக நுரையீரல் புற்று நோய் தின விழிப்பு ணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்விற்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. செ.வேலுச்சாமி தலைமை வகித்தார். பதிவாளர் பேரா.பி.கே. ஸ்ரீவித்யா முன்னிலை வகித்தார். வல்லம் காவல் நிலைய ஆய் வாளர் செந்தில்குமார் பேரணியை கொடியசைத்து துவக்கி  வைத்தார். பேரணி வல்லம் பெரியார் சிலையிலிருந்து புறப்பட்டு வல்லம் பேருந்து நிலையத்தை அடைந்தது. வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாண சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.  வல்லம் ஆரம்ப சுகாதார நிலையம் மரு.அகிலன் சிறப்புரை யாற்றினார்.