districts

img

வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஏப்.22-  

   தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏப்ரல் 21  அன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  சி.வி.கணேசன் தாக்கல் செய்த மசோதா வில், திருத்தம் செய்வது என்ற பெயரில் எட்டு  மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரமாக  மாற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட சட்ட  மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி  வருகின்றனர்.  

  இதனொரு பகுதியாக பெரம்பலூரில் சிஐடியு சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு எட்டு மணி நேரம் வேலை என்பதை  12 மணி நேரமாக மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் ரெங்கநாதன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.