districts

img

முதியோருக்கு அறுவை சிகிச்சையின்றி பெருந்தமனி வால்வு மாற்றம் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

திருச்சிராப்பள்ளி, செப். 8 - திருச்சி காவேரி மருத்துவமனையில் 60  வயது மற்றும் 70 வயதுடைய 2 முதிய வர்களுக்கு டிரான்ஸ்கத்தீட்டர் பெருந்தமனி வால்வு பதிய செயல்முறையை (டிஏவிஐ) பயன்படுத்தி அறுவை சிகிச்சை இல்லா மல் பெருந்தமனி வால்வு மாற்று சிகிச்சையை  மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ள னர். இதுகுறித்து காவேரி மருத்துவமனை யின் செயல் இயக்குநரும் இருதய அறுவை  சிகிச்சை நிபுணருமான செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “2 முதியவர்களும் சுவாச பிரச்ச னையோடு இங்கு சிகிச்சைக்காக வந்தனர். கூடுதலாக இவர்களுக்கு இதய செயல்பாடு தொடர்பான பாதிப்புகளும் இருந்தன. அவர்களுக்கு அறுவை சிகிச்சையின்றி பலூன் மூலம் விரிவாக்கக் கூடிய ஒரு (டிரான்ஸ்கத்தீட்டர் பெருந்தமனி வால்வு பதியம்) வால்வை இம்மருத்துவமனையின் சிறப்பு இருதயவியல் நிபுணரான மரு.சூரஜ்நரசிம்மன் தலைமையிலான மருத்துவக் குழு வெற்றிகரமாக பொருத்தி னர்.  டிரான்ஸ்கத்தீட்டர் பெருந்தமனி வால்வு  பதியம் மூலம் அறுவை சிகிச்சை இல்லா மலேயே ஒரு வால்வை இதன்மூலம் பொருத்த முடியும். எவ்வித வலியும் இல்லா மல் 45 நிமிடங்களுக்குள் முழு மயக்க நிலை யில்லாமல் ஒரு நோயாளிகளுக்கு இந்த மருத்துவ செயல்முறையை மேற்கொள்ள முடியும் என்பது இதன் தனித்துவ அம்சம்.  திறந்தநிலை அறுவை சிகிச்சைகளில் அதிகமான இடர்வாய்ப்பை கொண்டிருந்த இந்த முதியவர்களின் உயிரை காப்பாற்று வதற்கு மிகத் துல்லியமான நோயறிதலை யும் சரியான சிகிச்சை முறையையும் அடை யாளம் கண்டு வெற்றிகரமாக இதனை நிகழ்த்தியிருக்கும், இடையீட்டு இருதயவி யல் சிகிச்சை நிபுணர் சூரஜ் நரசிம்மன் மற்றும்  அவரது குழுவினரை பாராட்டுகின்றேன்” என்றார். 

;