பொன்னமராவதி, ஜன.21 - பொன்னமராவதி பேரூராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் நகரின் மையப் பகுதியான காந்தி சிலை பின்புறம் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இதனால் பெரும் துர்நாற்றத்துடன் தொந்தரவாக இருக்கும் நிலையில், அந்த குப்பை கிடங்கை உடனடியாக அகற்ற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குப்பை கிடங்கு அதே இடத்தில் தொடருமானால் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என பொன்னமராவதி ஒன்றிய பொறுப்பாளர் கே.குமார் தெரிவித்துள்ளார்.