districts

img

திருமண விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர் சங்க திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய குழு உறுப்பினருமான தக்ஷிணாமூர்த்தி-ஜெயராணி மகன் கிருஷ்ணகுமார், மேலமருதூர் தெற்குப் பிடாகை வீராசாமி - வேதவள்ளி ஆகியோர் மகள் சத்யபிரியா திருமணம் கும்பகோணம் அருகிலுள்ள ஏ.செம்மங்குடியில் நடைபெற்றது. கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமை வகித்து, மணமக்களை வாழ்த்திப் பேசினார். திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிவேல் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு - மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய-கிளை உறுப்பினர்கள், வாலிபர், மாதர் சங்கத்தினர் மணமக்களை வாழ்த்தினர்.