அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை, ஏப்.17- பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஒரு ஜோக்கராகத்தான் பார்க்கிறோம் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கைதிகள் உறவினர்களைக் காண்பதற்கு அவர்களோடு பேசுவதற்கான வசதிகளை ஏற்படுத்த உள்ளோம். கைதிகளுக்கான மன அழுத்தம் குறையும் என்பதற்காக இதை செய்ய உள்ளோம்.
சிறைத் துறையினர் உடலில் கேமராக்களை அணிந்து கொண்டு செல்லும் போது, சிறைகளின் நடவடிக்கை களை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க முடியும். கைதி கள் தவறு செய்வதை தடுப்பதற்கு உதவியாக இருக்கும். சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளிட்ட அனைத்து இடங்களி லும் பாதுகாப்பு நல்ல முறையில் வைத்துள்ளோம்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஒரு பொருட்டாகவே நாங்கள் எடுத்துக் கொள்வது கிடையாது. அவரை நாங்கள் ஜோக்கராகத்தான் பார்க்கின்றோம். வேறு எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் அவர்களின் ரணகளத்தை வைத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் அவர்களின் திட்டம் எடுபடாது. தமிழ்நாடு எப்பொழுதும் அமைதியான பூமியாக இருக்கும்’’ என்றார்.