districts

img

நகர்ப்புற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுக! விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், மே 29-

   கீழ்வேளூர் பேரூராட்சி யில் தொடங்கப்பட்ட நகர்ப்  புற 100 நாள் வேலைத்திட்டத்  திற்கு நிதி ஒதுக்காத தமிழ்  நாடு அரசை கண்டித்து கீழ்  வேளூரில் அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங் கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கீழ்வேளூர் பேரூராட்சி பகு தியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

   ஆர்ப்பாட்டத்தில், தமிழ் நாடு அரசு நகர்ப்புற 100 நாள்  வேலைத்திட்டத்திற்கு நிதி யை ஒதுக்க வேண்டும், நிறுத்தப்பட்ட வேலையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கண்டன முழக்கங் களை எழுப்பினர்.  

   இதனைத் தொடர்ந்து கீழ்வேளூர் கடை வீதியில்  இருந்து பேரூராட்சி அலுவல கம் வரை முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக சென்று பேரூராட்சி செயல்  அலுவலர் குகனிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

   நிகழ்வில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முருகையன், மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன், சிபிஎம் கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர்  என். எம்.அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;