districts

திருச்சி விரைவு செய்திகள்

மேற்கூரை உடைந்து  விழுந்து ஒருவர் காயம்

வேதாரண்யம், ஜூலை 17 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டு கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் காரை விழுந்தது. இதில் தென்னடார் ஊராட்சியைச் சேர்ந்த ரேவதி என்பவர் காயமடைந்தார். புதனன்று இரவு இக்கட்டத்தின் மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றது. பிரசவம் பார்க்க பெண்ணை அழைத்து வந்த குடும்பத் தினர், மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்தனர். அப்போது திடீரென சிமெண்ட் காரை விழுந்ததில், ரேவதி என்ற பெண்ணின் கையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அந்தப் பகுதியில்  இருந்த 10-க்கும் மேற்பட்டோர் காயமின்றி தப்பினர். இதனால் நோயா ளிகள், உறவினர்கள் அச்சமடைந்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம்  ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


டிஆர்இயு கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 17 - ஆர்.ஆர்.பி, ஆர்.ஆர்.சி தேர்வாணையம் மூலம் இந்திய ரயில்வே யில் உள்ள 3 லட்சம் காலிப் பணியிடங்களையும், தெற்கு ரயில்வே யில் உள்ள 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களையும், திருச்சி கோட்டத்தில் 3000-த்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங் களையும், ஐசிஎப்ல் உள்ள 1800-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங் களை உடனே நிரப்ப வேண்டும். இந்தியன் ரயில்வேயில் 92 ஆயிரம் காலிப் பணியிடங்களை ஒழித்ததையும், கடந்த 3 ஆண்டுகளாக காலிப் பணியிடங்களை நிரப்பாததை கண்டித்தும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் திருச்சி கோட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை திருச்சி ரயில்வே ஜங்சனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி கோட்ட தலைவர் கரிகாலன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் மாதவன், துணை பொதுச் செயலா ளர்கள் சரவணன், ராஜா, உதவி கோட்ட செயலாளர்கள் ரஜினி, பல ராமன், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் வேலுசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். பொன்மலை கிளைச் செயலாளர் பழனி நன்றி கூறினார். 


தனி நிதியம் உருவாக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூலை 17-  தையல் கலைஞர்கள் சம்மேளனம் மாநில நிர்வாகிகள் கூட்டம்  தஞ்சையில் மாநிலத் தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் துவக்கி வைத்துப் பேசி னார். சிஐடியு மாநிலச் செயலாளர் மகாலட்சுமி, மாநிலக் குழு முடிவு களை விளக்கிப் பேசினார். சம்மேளனப் பொதுச் செயலாளர் அய்டா  ஹெலன் எதிர்காலப் பணிகள் குறித்துப் பேசினார். மாநில பொருளா ளர் இரா.மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்டுமானம், ஆட்டோ நலவாரியத்திற்கு பணப் பலன்களை வழங்குவது போல, தையல் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.  தையல் தொழிலாளர் நல வாரியத்திற்கு தனி நிதியம் உருவாக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்க  வேண்டும். தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை கட்டுப்பா டின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. 


விளையாட்டு சீருடை வழங்கல்

தஞ்சாவூர், ஜூலை 17-  கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாளையொட்டி, தஞ்சை மாவட்டம் பேரா வூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கபடி விளையாட்டு வீராங்க னைகளுக்கு, அணவயல் பாரத் பால் நிறுவனம் சார்பில் சீருடை வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசி ரியை வீ.சாந்தி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் சுப. கார்த்திகேயன் வரவேற்றார். பாரத் பால் குழுமத்தின் நிறுவனர் சர வணன் 50 மாணவிகளுக்கு விளையாட்டு சீருடைகளை வழங்கி வாழ்த்திப் பேசினார்.  உடற்கல்வி ஆசிரியர்கள், பாரத் பால் நிறுவன மேலாளர் சங்கர், வீரியங்கோட்டை வெண்புறா கபடிக் குழு நிறுவனர் சட கோபன், கபடி பயிற்சியாளர் கட்டுமாவடி கார்த்திக், பாரதிதாசன் ஆகி யோர் உடனிருந்தனர். 


சட்ட விழிப்புணர்வு முகாம்

பாபநாசம், ஜூலை 17- தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலை வரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் மற்றும் தஞ்சா வூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும் சார்பு நீதி பதியுமான சுதா உத்தரவின் பேரில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. மெலட்டூர் அருகே ஒன்பத்துவேலி, நாகலூர், இடையிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் மக்களுக்காக நடந்த முகாமில், பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர் தன சேகரன், வட்ட சட்ட பணிகள் குழுவின் செயல்பாடுகள், சிவில் வழக்கு கள், குடும்ப பிரச்சனைகள், வங்கிக்கடன் தொடர்பான பிரச்சனைகள், கொடுக்கல்-வாங்கல் பிரச்சனைகள், தொழிலாளர்களுக்கான பிரச்ச னைகள் ஆகியவற்றிற்கு வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் நீதி மன்ற முறையில்லாமல் மாற்று முறையில் தீர்வு காண்பது பற்றி விளக்கினார்.  பட்டியல் வழக்கறிஞர்  பன்னீர்செல்வம் சட்ட விழிப்புணர்வு அறிக்கை பற்றிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கி னார். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழு வினர் செய்திருந்தனர்.


 

;