குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், ஜூலை 22- தஞ்சாவூர் கோட்ட அளவி லான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 26(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில், தஞ்சா வூர் வருவாய் கோட்ட அலுவல கத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத் திற்குட்பட்ட விவசாயிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் தெரிவித்துள்ளார்.
காலமானார்
கும்பகோணம், ஜூலை 22 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பால் சொ சைட்டி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளை முன்னணி உறுப்பினரும் தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான ஆர். ஜி.ராஜாராமன் வியாழக் கிழமை இரவு மாரடைப்பால் காலமானார். ராஜாராமன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக்குழு ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்து, அன் னாரை இழந்து வாடும் அவரு டைய குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தது. தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர், சிஐடியு சங்கத்தினர் ராஜாராமன் உடலுக்கு செவ்வ ணக்கம் செலுத்தினர்.
பணிகள் ஆய்வு
அரியலூர், ஜூலை 22 - அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே வெத்தி யார்வெட்டு கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆதிதிரா விடர் மேல்நிலைப் பள்ளியில் தாட்கோ மூலம் பள்ளியை சுற்றிச் சுவர் அமைக்கும் பணி கள் ரூ.24.6 லட்சம் மதிப் பீட்டில் நடைபெற்று வரு கின்றன. இந்தப் பணியை சென்னை தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் திருச்சி கோட்ட தாட்கோ செயற்பொறி யாளர் காதர் பாட்ஷா உள்ளிட் டோர் ஆய்வு செய்தனர். இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறி வுறுத்தினர்.
செஸ் போட்டி
தஞ்சாவூர், ஜூலை 22 - செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை, மாவட்ட ஊராட்சி செயலர் ராதா கிருஷ்ணன் தலைமையில் செஸ் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி செயலர் ராதாகிருஷ்ணன் செஸ் போட்டியினை விளை யாடி துவங்கி வைத்தார். செஸ் போட்டியில் மாணவர்கள், சுய உதவி குழு உறுப்பினர், உள் ளாட்சி பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அனைத்து நிலை அலு வலர்களும் கலந்து கொண்ட னர். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அரியலூர், ஜூலை 22 - அரியலூர் மாவட்டத்தில் கரீப் கேஎம்எஸ் 2021-2022 முன்பட்ட குறுவை பருவத் தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு முதல் கட்டமாக அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத் தில் ஸ்ரீபுரந்தான், காரைக் குறிச்சி, சோழமாதேவி மற்றும் பிள்ளைப்பாளையம் ஆகிய நான்கு கிராமங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. மேற்கண்ட கிராமங் களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) முதல் நேரடி நெல்கொள்முதல் நிலையங் கள் பயன்பாட்டிற்கு வந்தன. அருகில் உள்ள விவசாயப் பெருமக்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளு மாறு மாவட்ட ஆட்சியர் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள் ளார்.
வீட்டில் தீ விபத்து: உதவிகள் வழங்கல்
பாபநாசம், ஜூலை 22 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பா லைத்துறை எஸ்பிஜே மிஷன் தெருவைச் சேர்ந்தவர் மிகாவேல். இவர் கீற்று வீட்டில் தனது மகன் யோபுவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் வியாழனன்று காலை இவரது கீற்று வீட்டில் திடீரென தீப்பற்றியது. இதில் வீட்டிலிருந்த துணிகள், பாத்திரங்கள், மகனின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி நாசமாயின. அக்கம்பக்கத்தினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்தில் பாதிக்கப் பட்ட மிகாவேலுக்கு போர்வை, தலையணை, பாய், வேட்டி, சட்டை, துண்டு, பெட்ஷூட், ரூ.1,000 பணம் உள்ளிட்ட நலத்திட்ட உதவியை கவுன்சிலர் கீர்த்திவாசன் வழங்கினார். மேலும் கவுன்சிலர் பிரேம்நாத் பைரன் பண உதவியும், பாபநாசம் பேரூராட்சித் தலைவி பூங்குழலி கபிலன் அரிசி மூட்டை, பண உதவி யும் வழங்கினர்.
கல்லூரி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் மாணவர் சங்கம் கோரிக்கை
மன்னார்குடி, ஜூலை 22 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசினர் கல்லூரியில் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாணவர்களின் நலன் கருதி காலை-மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதியை புறசீர் அமைத்திட வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களின் விடுதிக்கான கட்டிடப் பணியை விரைந்து முடித்து நடப்பு கல்வி ஆண்டில் திறந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய மாணவர் சங்கத்தின் மன்னார்குடி ஒன்றிய நகர பேரவை வசந்த் பிரியன் தலைமையில் நடைபெற்றது. பேரவையை துவக்கி வைத்து மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் உரையாற்றினார். தலைவராக வி.ராஜசிம்மன், செயலாளராக ச.வசந்த்பிரியன், துணைச் செயலாளராக ஐ.சரண்ராஜ், துணைத் தலைவராக எஸ்.மகாலட்சுமி ஆகியோரை உள்ளடக்கிய 10 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. மாநில துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து நிறைவுரை ஆற்றினார்.
அலுவலக உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சிராப்பள்ளி, ஜூலை 22 - திருச்சி லால்குடி, குமுளுர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள 2 அலுவலக உதவி யாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்கள் இன சுழற்சியின் அடிப்படையில் முறையே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் அருந்ததியர் விதவைக்கு 1 பணியிடமும் மற்றும் பொதுப் பிரிவினருக்கு முறையே 1 பணியிடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.1.2022 அன்று 18 வயது நிரம்பிய வராகவும், 37 வயதுக்கு உட்பட்டவராகவும், பொது பிரிவினர் 34 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசுத் துறையினரால் வழங்கப்பட்ட கல்வி, வயது, சாதிச் சான்றிதழ் நகல்களோடு வெள்ளைத் தாளில் தன் விவ ரங்களை குறிப்பிட்டு (அண்மையில் எடுக்கப்பட்ட புகைப் படம், முகவரி மற்றும் கைபேசி எண்ணுடன்) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமுளுர், லால்குடி - 621712 என்ற முகவரிக்கு 2.8.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங் கள் இந்த அலுவலகத்திற்கு வந்து சேருமாறு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.