திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ரா தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் பா.பிரபாகரன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.முருகேசன் ஆகியோர் 106 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.