பாபநாசம், ஜூன் 27- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை மதகடி பஜாரிலிருந்து எருத்துக்காரத் தெரு உள்ளிட்ட தெருக்கள், நேரு நகர் உள்ளிட்ட நகர்க ளுக்குச் செல்லும் சாலை முகப்பில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்றது. இத னால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட அவதி குறித்து தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பணிகள் முடிக்கப்பட்டு போக்குவரத்து இயல்புக்கு வந்தது. செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.