districts

img

சுட்டெரிக்கும் வெயில் ஒரு பொருட்டல்ல! வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பிரச்சாரம்: மயிலாடுதுறையில் உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை, ஏப்.25 - ‘இளைஞர்களுக்கு வேலை கொடு’ என்ற முழக்கத்தோடு இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  புதுச்சேரி, கோவை, மதுரை, கன்னி யாகுமரி ஆகிய நான்கு முனைகளி லிருந்து சைக்கிள் பயண பிரச்சாரம் ஏப்ரல் 21 முதல் நடைபெற்று வருகிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைச் செயலா ளர் ஏ.வி.சிங்காரவேலன் தலைமையில்,  புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட சைக்கிள்  பிரச்சார பயண குழுவினர் ஞாயிறன்று மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் வந்தடைந்தனர்.  கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட  செயலாளர் பி.சீனிவாசன் தலைமை யில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ஏ.ரவிச்சந்திரன், ப.மாரியப்பன், ஒன்றிய  செயலாளர்கள் கேசவன், அசோகன்,  டி.ஜி.ரவி, கே.பி மார்க்ஸ், மயிலாடு துறை நகர செயலாளர் துரைக்கண்ணு,  சிஐடியு மாவட்டச் செயலாளர் ரவீந்தி ரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் நூர்ஜ கான், சுந்தரலிங்கம், வீ.எம்.சர வணன், கண்ணகி மற்றும் வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் அன்பு, செய லாளர் தேவேந்திரன் உட்பட வாலிபர்  சங்கத்தினர் பட்டாசு வெடித்து, முழக்க மிட்டு மாலை அணிவித்து சைக்கிள் பிரச்சார பயணக் குழுவினரை உற்சாக மாக வரவேற்றனர். பின்னர் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் வழியாக மயிலாடுதுறை, ஆத்துக்குடி வந்த பயணக் குழுவிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நகரக் குழு சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. அத னைத் தொடர்ந்து மயிலாடுதுறை விஜயா திரையரங்கு அருகே வாலிபர் சங்க மாவட்டத்தலைவர் அறிவழகன் தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.  மாநில துணைச் செயலாளரும், பயணக் குழு தலைவருமான ஏ.வி. சிங்காரவேலன், மாநிலத் துணைத் தலைவர் ஜோதிபாசு, மாநில செயற் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் லீலாவதி, மாவட்ட துணைத் தலைவர் ஐயப்பன் உள்ளிட் டோர் உரையாற்றினர்.  

திங்களன்று குத்தாலம் கடைவீதி யில் துவங்கிய பயணம் தேரிழந்தூர் (சேத்திரபாலபுரம்), சித்தர்காடு, மயி லாடுதுறை, மன்னம்பந்தல், செம்பனார் கோவில், ஆக்கூர், ஆக்கூர் முக்கூட்டு,  திருக்கடையூர், டி.மணல்மேடு, தில்லை யாடி, காட்டுச்சேரி, எடுத்துக்கட்டி, பூதனூர் சங்கரன்பந்தல் இலுப்பூர், நல்லாடை முக்கூட்டு, பனங்குடி (மதிய உணவு), வதிஷ்டாச்சேரி, குத்தாலம் ஒன்றியம், பெரம்பூர், மங்கநல்லூர் வழி யாக திருவாரூர் எல்லை சென்றனர்.  திருக்கடையூர் வந்தடைந்த பயணக்  குழுவினரை மார்க்சிஸ்ட் கட்சியின் தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் பண  மாலைகளை அணிவித்து, மேளத்தாளங் களுடன், பட்டாசு வெடித்து உற்சாக வர வேற்பளித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ஜி.வெண் ணிலா, மாவட்டக்குழு உறுப்பினர் கலைச்செல்வி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ராணி, கிளை செயலாளர் இளையராஜா மற்றும் மாதர் சங்கம், வாலிபர் சங்கத்தினர் வரவேற்றனர். செம்பனார்கோயிலில் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் மலர்தூவி, பட்டாசு வெடித்து, பணமாலை அணிவித்து வர வேற்றனர். மாவட்டக் குழு உறுப்பி னர்கள் வீ.எம்.சரவணன், கண்ணகி, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் அனீஷ் ரகுமான், ஒன்றிய தலைவர் மணி வண்ணன், பொருளாளர் சபீர் உள்ளிட் டோர் உடனிருந்தனர். இளைஞர்களின் நலனுக்காக சுட்டெ ரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தா மல் சைக்கிள் பிரச்சாரம் வந்த வாலிபர்  சங்கத்தினரை சாலையோரம் நின்ற பொது மக்களும் வியப்புடன்  வரவேற்றனர்.

;