districts

img

திசைகள் அமைப்பின் ‘அடுத்து என்ன படிக்கலாம்’ வழிகாட்டி நிகழ்ச்சி

அறந்தாங்கி, ஏப்.21- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இந்திய மருத்துவக் கழகம் மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு இணைந்து, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் ‘அடுத்து என்ன படிக்கலாம்’ என்ற உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தின. இதற்கு ஐஎம்ஏ தலைவர் மருத்துவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஐஎம்ஏ செயலாளர் மருத்துவர் சுதர்ஷன், பொருளாளர் மருத்துவர் இளையராஜா, திசைகள் பொருளாளர் முகமது முபாரக் ஆகியோர் முன்னிலையில், திசைகள் தலைவர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி துவக்க உரையாற்றினார். வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த், வேளாண் அலுவலர் முருகானந்தம், பொறியாளர்கள் கவின் பாரதி, கபார்கான், இயன்முறை மருத்துவர் காமராஜ், மொழி பேராசிரியர் சண்முகப்பிரியா, முனைவர் முபாரக் அலி, அறிவியல் ஆசிரியர் சண்முகப்பிரியா, நல்லாசிரியர் பாஸ்கரன், மருத்துவக் கல்லூரி மாணவர் நாகராஜன் ஆகியோர், மாணவர்களுக்கு வழிகாட்டி உரையாற்றினர். ஆன்டோ பிரவீன் நன்றி கூறினார்.