districts

img

தமிழகத்தை வடிகாலாக கருதக் கூடாது! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

நன்னிலம், ஜூன் 23 - மேகதாதுவில் அணையை கட்டும்  கர்நாடக அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேர ளத்தில் புதன்கிழமை மாலை 5 மணி யளவில் விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய தலைவர் எம்.ராமமூர்த்தி தலை மையில் நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,  தமிழ் மாநில விவசாயிகள் சங்கம்,  விவசாயத் தொழிலாளர் சங்கம் இணைந்து  நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில், இடது சாரி விவசாய சங்கங்களின் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தியாகு.ரஜினிகாந்த் பேசுகையில், தொடர்ச்சியாக கிருஷ்ணராஜ சாகர்,  கபினி என அணைகளை கட்டி கர்நாடகம்  தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறது. தற்போது மேகதாதுவில் அணை கட்ட  ஆயத்தம் செய்கிறது. ஆனால் வெள்ளக்  காலங்களில் மட்டும் மேட்டூர் அணையை  திறந்துவிட்டு தமிழகத்தை வடிகா லாக பயன்படுத்திக் கொள்வதை அனு மதிக்க முடியாது. தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க விடாமல் செய்வதன்  பின்னணியில் டெல்டா பகுதியின் எண்ணெய் வளங்களை கொள்ளை யடிக்க திட்டமிடும் பன்னாட்டு முத லாளிகள் சதி இருக்கிறது. அதன் ஒரு  பகுதியாகத்தான் பேரளத்தை அடுத்த பண்டாரவடையில் இந்தியன் ஆயில் நிறுவனம் ஆயிரக்கணக்கான குழாய் களை சேமித்து வைப்பதாகவும், அதை  எதிர்த்து போராட்டங்களை முன்னெடுக்க  இருப்பதாகவும் தெரிவித்தார்.

கொரடாச்சேரி
கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே விவசாயிகள் கூட்டியக்கம் சார்பாக நடைபெற்ற கருப்புகொடி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் கொரடாச்சேரி  ஒன்றிய செயலாளர் கே.செந்தில் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) மாவட்ட துணைத்தலைவர் கே.ஆர்.ஜோசப் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வலங்கைமான் ஒன்றி யம் ஆலங்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு விவசாயிகள் சங்க (சிபிஎம்)  ஒன்றியச் செயலாளர் கே.சுப்பிரமணி யன், சிபிஐ கலியபெருமாள் ஆகி யோர் தலைமை வகித்தனர். சிபிஎம் வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் என்.ராதா, சிபிஐ ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம், செங்கிப்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்  சார்பில், கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மாலை,  த.வி.ச மாவட்டக் குழு உறுப்பினர் சி.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

;