districts

img

தமிழக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் அரசு ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.9- தேர்தல் கால வாக்குறுதி களையும், தமிழ்நாடு அரசு  ஊழியர் 14-வது மாநில மாநாட்டில் அளித்த வாக்கு றுதிகளையும், ஜாக்டோ - ஜியோ வாழ்வாதார நம்  பிக்கை மாநாட்டு வாக்குறு திகளையும் நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூ திய திட்டத்தை நடைமுறைப்  படுத்த வேண்டும். பறிக்கப் பட்ட சரண்டர் வழங்க வேண்  டும். அரசாணை எண்.152 மற்றும் 115-ஐ ரத்து செய்ய வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்  டத்தை சத்துணவு ஊழியர்  களை கொண்டு நிறைவேற்ற வேண்டும். சாலைப் பணியா ளர் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக கருத வேண்டும். காலிப் பணி யிடங்கள் நிரப்ப வேண்டும். தொகுப்பு ஊதியம், மதிப்பூ தியத்தை ரத்து செய்து முறை யான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.  ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனங்களை கை விட வேண்டும் உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க  திருச்சி மாவட்ட மையத்தின் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகை யில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனைவர்  கா. பால்பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் பழனிச்சாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில துணைத் தலைவர் எ.பெரியசாமி நிறைவுரை யாற்றினார். மாவட்ட பொரு ளாளர் ஆர்.சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வெ.சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செ.பிர காஷ் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். சங்கத்தின் முன்னாள் மாநி லச் செயலாளர் எம்.சௌந்த ரராஜன் நிறைவுரையாற்றினார்.

;