புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் திமுக நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். பின்னர் பொன்னமராவதி அரசு மருத்துவமனை, மேலைசிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.