districts

நன்னிலம் கல்லூரிக்கு சுற்றுச்சுவர், சாலை வசதி வேண்டும்

திருவாரூர், மார்ச் 8-  நன்னிலம் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி-இந்திய மாணவர் சங்கத்தின் 11-ஆவது கல்லூரி கிளை மாநாடு, நன்னிலத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு கிளைத் தலைவர் ம.ஹரிஷ் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் செ.ஜெனிஷ் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் ஜெ. தயாநிதிமாறன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் பா.ஆனந்த் துவக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் கு.சந்துரு சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பா.லெ.சுகதேவ் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுரையாற்றினார். புதிய தலைவராக ரா. நந்தகுமார், செயலாளராக அ. பிரசன்னா ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். மாணவ ஜனநாயகப் பேரவை தேர்தல் நடத்திட வேண்டும். கல்லூரிக்கு சுற்றுச்சுவர் மற்றும் சாலை வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளை அதிகப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக வலியுறத்தப்பட்டது.