districts

img

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்கிடுக! மின் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.26 - மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு  பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்கிட வேண்டும். மின் ஊழியர்களையும், ஓய்வூதி யர்களையும் பாதிக்கும் பி.பி.எண்:2 உத்தரவை ரத்து செய்ய வேண்டும். புதிய பதவிகளை அனுமதிக்காமல் மறு பகிர்வு முறையை புகுத்தக் கூடாது.  வேலைப்பளு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பிரிவுகளுக்கு மின் இணைப்பு எண்ணிக்கையையும், வட்டம் மற்றும் மண்டலங்களை உருவாக்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேசி தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவ டிக்கை குழு சார்பாக மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை  நடைபெற்றது.  தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திங்க ளன்று திருச்சி தென்னூரில் உள்ள மின்வா ரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாநில பொதுச் செயலாளர் சுப்ரமணியன், செயலாளர்கள் பொறியாளர் கழக சந்தான கிருஷ்ணன், தமிழ்நாடு மின்வாரிய மத்திய  அமைப்பு எஸ்.கே.செல்வராஜ், எம்ப்ளாய்ஸ் பெடரேசன் சிவசெல்வம் ஆகியோர் பேசினர்.

தஞ்சாவூர்
தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட தலை வர் து.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் கோரிக்கைகளை ஆதரித்து பேசினார். மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன், மின்சார தொழி லாளர் சம்மேளன செயலாளர் பொன்.தங்க வேலு உள்ளிட்ட பலர் பேசினர். ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் தில்லைவனம் நிறை வுரையாற்றினார்.

;