districts

img

திருமண விழா

அரசு போக்குவரத்து ஊழியர் சங்க கும்பகோணம் மண்டல சிஐடியு துணைத் தலைவரும் சிபிஎம் போக்குவரத்து இடை கமிட்டி உறுப்பினருமான அழகிரிசாமியின் மகன் மணிகண்டன் அருள்மொழிதேவன், கேசவமூர்த்தி மகள் காயத்ரி ஆகியோரது திருமண விழா வலங்கைமானில் நடைபெற்றது. விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாநகரச் செயலாளர் செந்தில்குமார், நகரக் குழு உறுப்பினர் ராஜகோபால், போக்குவரத்து ஊழியர் சங்க கும்பகோணம் கோட்ட பொதுச் செயலாளர் மணிமாறன், பொருளாளர் ராமசாமி உள்ளிட்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள், சிபிஎம் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் விழாவில் சென்னை நிர்மல் பள்ளிக்கு மக்கள் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.