திருவாரூர்/பெரம்பலூர், நவ.8 - பட்டியலின மக்களின் மாண்புடன் கூடிய வாழ்வை உறுதி செய்வதற்கான கோரிக்கை சாசனத்திற்கு ஆதரவாக, விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஒரு கோடி கையெ ழுத்து இயக்கம் நவ.7 அன்று தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரு கிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் திருவா ரூர் மாவட்ட குழு சார்பாக மாபெரும் கையெழுத்து இயக்கத்தின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஜி.பழனிவேல் தலைமை வகித் தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார். அமைப்பின் மாநிலச் செயலாளர் ஆர்.கலைச் செல்வி கையெழுத்து இயக்கத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கே. தமிழ்மணி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் செ.செங்குட்டுவன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் இரா.மாலதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன், வி.தொ.ச மாவட்டப் பொருளாளர் ஆறு.பிரகாஷ், சிபிஎம் நகரச் செயலாளர் எம்.தர்மலிங்கம் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். நாடு முழுவதும் உள்ள தலித் அமைப்புகள் கடந்த அக்.26, 27 தேதி களில் ஹைதராபாத்தில் மாநாடு நடத்தின. இந்த மாநாட்டில், தலித் அமைப்புகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெற்று, குடியரசுத் தலை வரிடம் கொடுப்பது என முடிவு செய்யப் பட்டது. அதனடிப்படையில் இந்த கை யெழுத்து இயக்கம் நடைபெற்றது. பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் விதொச சார்பில் நடைபெற்று வரும் கையெ ழுத்து இயக்கத்திற்கு மாவட்டச் செய லாளர் அ.கலையரசி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் துவக்கி வைத்தார். டிசம்பர் 4 ஆம் தேதி தில்லியில் பட்டி யலின மக்களின் எழுச்சி பேரணி நடத்தி, குடியரசுத் தலைவரிடம் இந்த மனுக்கள் அளிக்கப்படும்.