districts

பயன்படுத்தப்பட முடியாத நிழற்குடைகள்

பாபநாசம், ஜூன் 11-

     தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - சாலியமங்கலம் பிரதான சாலை  16 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்தச் சாலையில் பல கிராமங்கள்  உள்ளன. இந்தச் சாலையில் உள்ள சில பயணியர் நிழற்குடைகள் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை. பழுதடைந்த நிழற் குடை களை சீரமைக்க வேண்டும். பாபநாசம் ஆர்.டி.பி காலேஜ் அருகே உள்ள பயணியர் நிழற்குடையில் உட்காரும் இருக்கை உடைந்து விட்டது.  பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.