திருவாரூர், ஏப்.25-
கொக்கலாடியைச் சேர்ந்த மூத்த தோழர் கணேசன் காலமானார். திருவாரூர் மாவட்டம்,வலங்கைமான் ஒன்றியம் கொக்கலாடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செய லாளர் ஜி.தியாகராஜனின் தந்தை தோழர் கணேசன் திங்கள்கிழமை காலமானார். அன்னாரது மறைவு செய்தி அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் என். இராதா, மாவட்டக்குழு உறுப்பி னர்கள், எப்.கெரக்கோரியா, கே.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி திங்களன்று மாலை நடைபெற்றது.