districts

விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு ‘சீல்

திருச்சிராப்பள்ளி, ஜூன், 4-

    திருச்சிராப்பள்ளி தில்லைநகர் 4-வது குறுக்குச் சாலை பகுதியில் அடுக்குமாடி குடி யிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியி ருப்பில் நான்கு வீடுகளுக்கு அனுமதி வாங்கி  விட்டு எட்டு வீடுகள் மற்றும் கடைகள் கட்டிய தாகவும், மேலும் அங்கு கடைகள் மாநக ராட்சி அனுமதிக்கு மாறாக விதிமுறை களை மீறி கட்டப்பட்டதாக சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில்  வழக்கு தொடரப் பட்டது. நீதிமன்றம் உடனடியாக அடுக்கு மாடி குடியிருப்பு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ஆனால் மாநகராட்சி நடவ டிக்கை எடுக்காமல் தாமதம் செய்து வந்த தாகத் தெரிகிறது.

    இதையடுத்து திருச்சிராப்பள்ளி பாலக் கரை ஆட்டுக்கார தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  அடுக்குமாடிக் குடியிருப்பு அனுமதி மீறி  கட்டிய குடியிருப்பு. வீடுகளையும், கடை களையும் இடிக்க வேண்டும். இதற்கு உடந் தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். அடுக்குமாடி குடி யிருப்பின் மின் இணைப்பைத் துண்டிக்க வேண் டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார்.  

   அடுக்குமாடி குடியிருப்பு விதிமுறை மீறி  கட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டதால்  உட னடியாக காலி செய்ய வேண்டும் என்று மாநக ராட்சி சார்பில்  நோட்டீஸ் அனுப்பப்பட்டது இதையடுத்து அங்கு குடியிருந்தவர்கள் சமீபத்தில் வீடுகளைக் காலி செய்தனர். தொடர்ந்து கோ-அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

;