districts

அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போர் பாதுகாப்போர் சங்கத்தின் போராட்டம் வெற்றி

மயிலாடுதுறை, ஜூலை 28-  தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போர் பாதுகாப்போர் சங்  கத்தினர் தொடர்ந்து நடத்திய போராட்டங் கள் வெற்றி பெற்றுள்ளது.  விவசாய நிலங்களை சட்டத்திற்கு புறம்  பாக மனை பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்து அரசையும், பொதுமக்களையும் ஏமாற்றி நிலத்தை விற்று பணமோசடி செய்த புரோக்கர் பைனான்ஸ் பாண்டி யனை கைது செய்ய கோரியும், ஸ்ரீ நாராய ணபுரம், அவையாம்பாள்புரம், மயூரநாதர் நகர் ஆகிய பகுதிகளுக்கு அடிப்படை வசதி கள் செய்துதரக்கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் புத னன்று மயிலாடுதுறை வருவாய் கோட்ட  அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமை யில் அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில், வட்டாட்சியர், உதவி  இயக்குநர் (இயக்குதலும் பராமரித்த லும், தமிழ்நாடு மின்சார வாரியம், மயிலாடு துறை), நகராட்சி பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வா ளர், தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போர் பாதுகாப்போர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில், மயிலாடுதுறை நகரம்,  மயூரநாதர் நகர் மற்றும் மாப்படுகை கிரா மம், ஸ்ரீநாராயணபுரம், அவையம்பாள் புரம் ஆகிய நகர்களில் இதுவரை மின்  இணைப்பு பெறாதவர்கள் விண்ணப்பித்தி டுமாறும், அரசு விதிகளுக்குட்பட்டு மின்  இணைப்பு வழங்கிட நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளிக்கப்பட்டது.  

குடியிருப்புகளில் இயங்கிவரும் நலச்சங்கங்களிடமிருந்து விண்ணப்பம் பெற்று தங்கள் துறை உயர் அதிகாரிகளி டம் ஆலோசித்து, அனுமதி பெற்று அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதிகள் மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்து தருவதாக மயிலாடுதுறை நகராட்சி  பொறியாளர் மற்றும் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலரால் உறுதிய ளிக்கப்பட்டது.  ஸ்ரீநாராயணபுரம் நகர்ப்பகுதியில் உள்ள முத்தப்பன் காவிரியில் தண்ணீர் தேங்குவதை தடுத்திட ஸ்ரீநாராயணபுரம் முகப்பில் தற்காலிக வடிகால் வசதிகள் அமைத்திடுவதாக நீர்வள ஆதார துறை யினரால் உறுதியளிக்கப்பட்டது. கோரிக்  கைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு  எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததை யடுத்து பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.

;