districts

வாய்க்காலை தூர்வாரக் கோரி விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி, நவ.1- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம்  அந்தநல்லூர் ஒன்றியம் உய்யக்கொண் டான் வாய்க்காலில் இருந்து கல்லாங் காட்டு வாய்க்கால் பிரிகிறது. இதிலிருந்து பேரூர் ஊராட்சியில் பிரியும் கிளை வாய்க்காலான பெட்டவாய்த்தலை வாய்க்  காலை தூர்வாரக் கோரி மனு கொடுக்கப் பட்டது.  அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் சார்பில் பேரூர் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் தலைமையில் திங்களன்று அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தங்கதுரை, மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணா, ஒன்றிய செயலாளர் ஜோதி முருகன், ஒன் றிய தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்டத் தலைவர் கே.சி. பாண்டியன், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் சீனிவாசன், அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஜீயபுரம் காவல் ஆய்  வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தநல்லூர் பகுதி திருப்பராய்த் துறை முதல் பெருகமணி வரை உள்ள நந்தன்  கழிவு வாய்க்காலில் சுமார் 4 கி.மீட்டர் உள்ள  வாய்க்காலை முக்கொம்பு ஆற்று வாய்க் கால் பாதுகாப்பு பிரிவு அலுவலர்களால் சுத்தம் செய்வது, முருங்கைப்பேட்டை, கம்பரசம்பேட்டை, பெரிய நகர் போன்ற  பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகளை  வெளியே அவிழ்த்து விடும் மாட்டின் உரி மையாளர்கள் குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வது, கல்லாங் காட்டு வாய்க்காலில் பேரூர் ஊராட்சியில் பிரியும் கிளை வாய்க்காலை 10 நாட்க ளுக்குள் தூர்வார நடவடிக்கை மேற்கொள்  வது என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக் கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.

;