districts

img

புகையிலை தொழிலாளர்கள் நிவாரணம் கேட்டு தொடர் காத்திருப்பு போராட்டம்

கும்பகோணம், மார்ச்.25- தஞ்சை மாவட்டம் கும்பகோண த்தில் மைதீன் புகையிலை நிறுவனம் நீண்ட நாளாக செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் புகையிலைக்கு தமிழக அரசு தடை விதித்ததால் இந்நிறுவனம் கடந்த மூன்று மாத ங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால், அந்நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக நிறுவனத்திடம் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக கோரியும் மெல்லும் புகையிலைக்கு தடையை நீக்கக் கோரியும் அல்லது தமிழக அரசு வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கிடவும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், தமிழக அரசும் நிர்வாகமும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் வியாழனன்று முதல் கும்பகோணம் மைதீன் புகையிலை தொழிற்சாலைக்கு முன்பு சிஐடியு மைதீன் தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் கணேசன், செந்தில், இளங்கோ ஆகியோர் தலைமையில் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே.சரவணன் தொழிலாளர்களுக்கு ஆதரவு அளித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார். மேலும் மாநகராட்சி சார்பில் சட்டபடி நடவடிக்கை எடுக்க உதவி செய்வதாக உறுதியளித்தார். காத்திருப்பு போராட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சா.ஜீவபாரதி, மாவட்ட பொருளாளர் எம்.கண்ணன், சிபிஎம் மாநகர செய லாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;