districts

img

ஊராட்சித் தலைவரை விடுதலை செய்யக் கோரி காத்திருப்புப் போராட்டம்

மயிலாடுதுறை, மே 21-

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் ஒன்றிய அரசின் நிதியை நேரடியாக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு  செய்ய வேண்டும் என வலியுறுத்தி புளியந் துறை ஊராட்சி மன்றத் தலைவர் நேதாஜி  தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் நேதாஜி உள்ளிட்ட ஒன்பது ஊராட்சி மன்றத் தலைவர்களைக் கைது செய்தனர். எட்டு ஊராட்சி மன்றத்  தலைவர்கள் அன்று மாலையே விடுவிக்கப் பட்டனர். இந்த நிலையில் புளியந்துரை ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.நேதாஜியை மட்டும் காவல்துறையினர் கைது செய்து சீர்காழி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்  படுத்தி  சீர்காழி கிளை சிறையில் அடைத்தனர். தற்போது கிளை சிறையில் இருந்து வரும்  ஏ.நேதாஜியை விடுதலை செய்ய வலியு றுத்தி புளியந்துறை ஊராட்சி மன்ற அலுவ லகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றிய செயலாளர் கே.கேசவன் தலைமையில்கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எல். சுந்தரலிங்கம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா ளர் எஸ். இளங்கோவன். விவசாயிகள் சங்க  ஒன்றியத் தலைவர் சி.பாக்கியராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

   தகவலறிந்த சீர்காழி வட்டாட்சியர் செந்தில் குமார், காவல்துறை துணைக் கண்காணிப் பாளர் லாமேக், ஒன்றிய ஆணையர் அருள் மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினா ராணி, புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி,  போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் காத்திருப்புப் போ ராட்டம் ஞாயிறன்றும் தொடர்ந்தது.