districts

img

சின்னசுருளி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை

கடமலை, ஜூலை 7- தேனி மாவட்டம், ஆண்  டிப்பட்டி அருகே கோம்பை தொழு கிராமத்தில் சின்ன சுருளி அருவி உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் உள்ள இந்த அருவிக்கு தமி ழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் சுற்றுலா பய ணிகள் வந்து செல்கின்ற னர். அதிகமான சுற்றுலா பய ணிகள் வருவதால் அப்பகுதி யில் வனத்துறையினர் சோத னைச்சாவடி அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்னசுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதியான மேக மலை வனப்பகுதியில் கடந்த  2 நாட்களாக தொடர்ந்து சாரல்மழை பெய்து வருகிறது.  இதனால் சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதி கரித்துள்ளது. சனிக்கிழமை  விடுமுறை தினம் என்ப தால் பல் வேறு மாவட்டங்க ளில் இருந்து சுற்றுலாப் பய ணிகள் சின்ன சுருளி அரு வியில் வந்து குளித்து மகிழ்ந்தனர்.