districts

தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் தொடர்ந்து பணிநீக்கம் : சிஐடியு கண்டனம்

திருவாரூர், செப். 15 - தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த பரப்புரையாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பலர் தொடர்ச்சியாக வேலை நீக்கம் செய்யப்பட்டு வரு கின்றனர். அண்மையில் மயி லாடுதுறை அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்  ஒருவர் தற்கொலை செய்து  கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த துயர மான சூழ்நிலையில் கூட தொ டர்ந்து பணிநீக்கம் நடை பெற்று வருகிறது.  தனியார் நிறுவனங்கள் அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை தேர்வு செய்வதும் ஒருசில மாதங்களில் அவர் களை நீக்கி விட்டு வேறு சிலரை அதே பணிக்கு தேர்வு  செய்வது என்ற அடாவடித்த னமான செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். திரு வாரூர் மாவட்டத்திலும் தொ டர்ச்சியாக பலர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

 திருவாரூர் நகராட்சி யில் ஏழு பேர் திடீரென  பணியிலிருந்து நீக்கப்பட்ட தால் திருவாரூர் நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் உரிய பதிலளிக்கவில்லை. இதனால் பணி இழந்தவர்கள் சிஐடியு தலைவர்களிடம் முறையிட்டனர். அவர்கள் சென்று கேட்டபோதும் ஆணையர் உரிய முறை யில் விளக்கம் அளிக்க வில்லை. இதனால் சிஐடியு தொழிற்சங்கத்தினர் பாதிக்கப்பட்டவர்களுடன் திருவாரூர் நகராட்சி வாச லில் சிஐடியு மாவட்டத் தலை வர் இரா.மாலதி தலைமை யில் சாலை மறியலில் ஈடு பட்டனர்.  சிஐடியு மாவட்ட செயலா ளர் டி.முருகையன், ஜி.ரெகு பதி, ஜி.தனுஷ்கோடி, கே. கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு நகராட்சி ஆணை யர் மற்றும் காவல்து றையினர் நேரில் சமரச பேச்சு வார்த்தை நடத்தி தொடர்ந்து பணி செய்யலாம் என உறு தியளித்ததின் பேரில் சாலை  மறியல் விலக்கி கொள்ளப் பட்டது.  அதேநேரத்தில் உறுதி யளித்த அடிப்படையில் நடந்து கொள்ளாமல் புதிய  ஆட்களை நியமனம் செய்கிற  வேலையில் அதிகாரிகள்  தொடர்ந்து ஈடுபட்டு வரு வதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக பெண்கள் கூறு கின்றனர். மாவட்ட ஆட்சி யர் இப்பிரச்சனையில் தலை யிட்டு உரிய முறையில் பாதிக் கப்பட்டவர்களுக்கு நியா யம் வழங்கிட வேண்டுமென சிஐடியு கேட்டுக் கொண்டு உள்ளது.

;