புதுச்சேரி என்றதும் பலருக்கும் அதன் பழமையான கட்டிடங்கள், அழகான கடற்கரை பகுதிகள்தான் நினைவுக்கு வரும். ஆனால் புதுச்சேரியில் பலருக்கும் தெரியாத கிட்டத்தட்ட பிச்சாவரத்திற்கு இணையான சதுப்பு நிலக்காடு உள்ளது. புதுச்சேரியின் முருங்கம்பாக்கம் ஆறு மற்றும் கடல் சந்திக்கும் இடத்தில் இந்த காடு அமைந்துள்ளது. படகு சவாரி செய்தபடியே இங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம்.