சென்னை,ஜூன் 13-
சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் பிரார்த்தனா டிரைவ்-இன் மற்றும் ஆராதனா தியேட்டர்கள் உள்ளன. பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டர் கடந்த 1991-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் திரை 100-க்கு 60 அடி என்ற அளவு கொண்டது. இந்த திரை கான்கிரீட்டால் ஆனது. இந்த தியேட்டர் தற்போது இயங்கவில்லை. இந்த நிலையில் பிரார்த்தனா, ஆராதனா தியேட்டர்கள் இடிக்கப்பட உள்ளன. இதில் வில்லாக்கள் கட்டப்பட உள்ளன. தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று இந்த தியேட்டர்களை விலைக்கு வாங்கி உள்ளது. இதுமொத்தம் 29 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மதிப்பு ரூ.550 கோடிக்கு மேல் ஆகும். இதில் ஒரு கிரவுண்ட் விலை ரூ.3.5 கோடி ஆகும். அதே கட்டுமான நிறுவனம் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீனிவாசா தியேட்டரையும் வாங்கி உள்ளது. இதையடுத்து ஸ்ரீனிவாசா தியேட்டர் இடிக்கப்பட்டு 18 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. இதன் கட்டுமான பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது.